நாம் ஒரு நாளைக்கு குறைந்தது 10 முறையாவது நெட்டி முறிப்போம். நெட்டி முறிப்பது என்பது விரல்களை வளைக்கும்போதோ அல்லது பின்னோக்கி இழுக்கும்போதோ ஒருவிதமான சத்தத்தைக் கேட்பதுதான். பலருக்கு இது அன்றாடப் பழக்கமாகவே உள்ளது. சிலர் கடுமையான வேலை நேரத்திற்கு மத்தியில் மன அழுத்தத்தைக் குறைக்க விரல்களைச் சொடுக்குகிறார்கள். பெரும்பாலான மக்கள் அவ்வாறு செய்யும்போது தற்காலிகமாக ரிலாக்ஸாக உணர்கிறார்கள்.
Source: Boldsky Tamil Food (Tamil)
